சினிமா பிக்பாஸ்

கல்நெஞ்சையும் கலங்கவைத்த பிக்பாஸ்! கண்ணீர்விட்டு அழுத ரசிகர்கள்! அப்படி என்னதான் நடந்தது?

Summary:

Bigg boss mohan vaitha made everyone to cry

விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் போட்டி தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் போட்டியின் மூன்றாவது நாள் (புதன்) லக்ஸரி பட்ஜட்டிற்கான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், சீட்டில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் பதில் கூறவேண்டும்.

அதில், முதலாவதாக மோகன் வைத்யா அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் மேடை ஏறியதும் கைதட்டி, ஆர்ப்பரித்த சக போட்டியாளர்கள் மோகன் வைத்யா பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலையே அழத்தொடங்கிவிட்டனர்.

மறக்கமுடியாத நாள்? கணவன் மனைவி உறவு இதற்கு பதிலளித்த மோகன் வைத்யா மறக்க முடியாத நாள் என்று அவரது மனைவி இறந்த நாளை கூறினார். மோகன் வைத்தாயா மனைவி அவர்கள் வாய் பேசமுடியாத, காது கேட்கமுடியாத ஒரு நபர். ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவரது கைப்பை மாட்டிக்கொள்ள ரயில் வருவது தெரியாமல் கீழே குனிந்து நிமிரும்போது ரயில் அவரது தலையில் மோதியுள்ளது.

இதனை சோகம் கலந்த கண்ணீருடன் மோகன் வைத்யா கூறும்போது அணைத்து போட்டியளர்களும் சோகத்தின் உச்சத்தில் இருந்தனர். மேலும், அவர் கூறியதை கேட்ட போட்டியாளர்கள் வாய்விட்டு அழத்தொடங்கிவிட்டனர். அதற்க்கு காரணம், மோகன் வைத்யா மனைவி இறக்கும்போது அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததாக மோகன் வைத்யா கூறினார்.

மோகன் வைத்தாயாவின் இந்த சோகத்தை கேட்ட போட்டியாளர்கள் மட்டும் இல்லை, பிக்பாஸ் ரசிகர்களும் கண்ணீர் சிந்தியதை பார்க்க முடிந்தது. 


Advertisement