உயிரிழந்த தனது தந்தை பற்றி லாஷ்லியா பேசிய உருக்கமான வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்..

உயிரிழந்த தனது தந்தை பற்றி லாஷ்லியா பேசிய உருக்கமான வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்..



Bigg boss losliya talks about her father viral video

பிக்பாஸ் புகழ் லாஷ்லியாவின் தந்தை உயிரிழந்த நிலையில் தனது தந்தை குறித்து லாஷ்லியா பேசிய பழைய வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஷ்லியா. பிக்பாஸ் போட்டியாளரை தவிர அவரது மொத்த குடும்பமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானது என்றால் அது லாஷ்லியாவின் குடும்பம்தான். குறிப்பாக அவரது தந்தை மரியநேசன்.

losliya

பிக்பாஸ் வீட்டில் தனது மகள் காதல் சர்ச்சையில் சிக்கி அவமானப்படுவதை தாங்கிக்கொள்ளமுடியாத அந்த தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் தனது மகள் மீது கோவித்துக்கொண்டு அவரை தண்டித்ததும், பின்னர் அவரை கட்டி அனைத்து பாசமழை பொழிந்ததும் பிக்பாஸ் ரசிகர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள்.

பிக்பாஸ் வீட்டில் கவின் - லாஷ்லியா காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த லாஷ்லியாவின் தந்தை இருவரையும் எப்படியும் சேர்த்து வைத்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் அவர் நேற்று இரவு திடீரெனெ மரணமடைந்தார். இந்த செய்தி லாஷ்லியாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

losliya

மேலும் சமூக வலைத்தளங்களில் #Losliya என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே தனது தந்தை பற்றி லாஷ்லியா தந்தையர் தினத்தன்று பேசிய மிக உருக்கமான வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...