முதல் முறையாக தனது திருமணம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா! - TamilSpark
TamilSpark Logo
சினிமா பிக்பாஸ்

முதல் முறையாக தனது திருமணம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறு அன்று முடிவுக்கு வந்தது. பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இறுதிநாள் கொண்டாட்டத்திற்கு முன்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில், திருமணம் குறித்து லாஷ்லியாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த லாஷ்லியா, நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள், என் அப்பா இங்கு வந்தபோது அவரை இந்த சமூகம் எப்படி நடத்தியது என்று எனக்கு தெரியாது, அதேபோல் அவரை என்னை எப்படி பேசியிருந்தாலும் அவர் என் அப்பா, எங்கள் உறவில் எந்த சிக்கலும் கிடையாது. என்னுடைய நன்மைக்காகத் தான் அவர் அப்படி பேசியுள்ளார்.

எனது பெற்றோர் காதலித்து திருமணம் செய்த்தவர்கள், அவர்களது காதல் கதையா பலமுறை தங்களிடம் கூறி நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் என சொல்லி சொல்லி வளர்த்துள்ளார்கள்.

கட்டாயம் நான் எனது பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொள்வேன், என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள் என லாஷ்லியா கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo