சினிமா பிக்பாஸ்

லாஷ்லியாவிற்காக சேரன் செய்த காரியம்! முதல் முறையாக உண்மையை கூறிய லாஷ்லியா.

Summary:

Bigg boss lashliya talks about seran

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர்.

இதில், இயக்குனர் சேரன் சீக்ரெட் அறையில் இருந்து மற்ற போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவனித்துவருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கவனித்துவிட்டு சேரன் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்பதுபோல பிக்பாஸ் ஒரு கடிதத்தை கொடுத்து படிக்க சொல்கிறார்.

அதில் இருந்த கேள்விகளில் ஓன்று சேரன் வீட்டில் இருந்து சென்றதும் லாஷ்லியா சேரன் குறித்து யாரிடமாவது பேசியது உண்டா? அவர் இல்லை என்பதை நினைத்து வருத்தப்பட்ட தருணம் உண்டா என கேள்வி இருந்தது. இதற்கு பதிலளித்த லாஷ்லியா ஒருசில வினாடிகளிலையே அழ தொடங்கிவிட்டார்.

மேலும் பேசிய லாஷ்லியா சேரன் வீட்டில் இருந்தபோது தனது பல்வேறு தருணங்களில் ஆறுதலாக இருந்ததாகவும், தான் தூங்கும்போது தனக்கு கால் கூட அமுக்கி விட்டதாகவும் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். கேமிராக்களில் இந்த காட்சிகள் காட்டப்பட்டவில்லை என்றாலும் லாஷ்லியா மீது சேரன் வைத்திருக்கும் பாசம் இன்று அனவைருக்கும் தெரியவந்துள்ளது.


Advertisement