சினிமா பிக்பாஸ்

கவினை பார்த்து லாஷ்லியாவின் தந்தை என்ன கூறினார் தெரியுமா? இதோ.

Summary:

Bigg boss lashliya father to kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வர தொடங்கியுள்னனர். அந்த வகையில் நேற்று லாஷ்லியாவின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் வந்திருந்தனர். வீட்டிற்குள் வந்த கையோடு ஒட்டுமொத்த குடும்பமும் லாஷ்லியா - கவின் இடையேயான காதல் குறித்து பேச தொடங்கிவிட்டனர்.

லாஷ்லியாவின் தந்தை கோவமான முகத்துடன் லாஷ்லியவை கடிந்துகொண்டார். இவற்றையெல்லாம் பார்த்த கவின் குற்ற உணர்ச்சியில் தனியே சென்று அழ தொடங்கிவிட்டார். லாஷ்லியாவின் பெற்றோரை குற்ற உணர்ச்சியுடனே பார்த்துக்கொண்டிருந்தவர் நான் அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்கவா என சேரனிடம் கேட்க அவர் அதெல்லாம் தேவை இல்லை என்று சமாதானம் செய்தார்.

தனது மகளிடம் பேசி முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்து அனைத்து போட்டியாளர்களுக்கு கை கொடுத்து கட்டிப்பிடித்தார். கவினை பார்த்து முதலில் தர்சன் என கூறினார் அதன்பின்னர் இவர் கவின் என சேரன் தெளிவுபடுத்தியதோடு அவர் மிகவும் குற்ற உணர்ச்சியில் இருப்பதாகவும் லாஷ்லியாவின் தந்தையிடம் கூறினார்.

லாஷ்லியாவின் தந்தை அதெல்லாம் ஒன்றும் இல்லை, உங்கள் மீது தனக்கு எந்த கோவமும் இல்லை என்றும், எல்லோரும் விளையாடத்தான் வந்துள்ளீர்கள் நண்பர்களாக விளையாடிவிட்டு நண்பர்களாவே வெளியில் வாருங்கள், எதுவாக இருந்தாலும் வெளியே பேசிக்கொள்ளலாம் என்பதுபோல் கவினிடம் கூறினார் லாஷ்லியாவின் தந்தை.


Advertisement