10 வருடம் கழித்து தந்தையை பார்த்த லாஷ்லியா! ஆனால் அவர் தந்தை செய்யும் காரியத்தை பாருங்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா பிக்பாஸ்

10 வருடம் கழித்து தந்தையை பார்த்த லாஷ்லியா! ஆனால் அவர் தந்தை செய்யும் காரியத்தை பாருங்கள்.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை நெருங்கியுள்ள இந்த சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர்.

சீக்ரெட் அறையில் இருந்த சேரனும் இன்று அறையில் இருந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வரிசையாக வீட்டிற்குள் வர தொடங்கியுள்ளனர். நேற்று முகெனின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

இந்நிலையில் லாஷ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். தனது தந்தையை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என கூறியிருந்த லாஷ்லியா தனது தந்தையை பார்த்ததும் கதறி அழுகிறார். அவரது தந்தையோ மகள் மீது கோவத்தில் இருப்பதுபோல் நடந்துகொள்கிறார். இந்த காட்சி ப்ரோமோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo