சினிமா பிக்பாஸ்

அப்பா சொன்னதையும் மீறி இன்றும் லாஷ்லியா செய்த காரியம்! கமல் என்ன சொன்னார் தெரியுமா?

Summary:

Bigg boss lashliya father advice

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 85 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை சீசன் மூன்று நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

அணைத்து போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடிவருவதால் இந்தமுறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் என பிக்பாஸ் வீட்டிற்கு வந்து செம ரகளை செய்தனர்.

இதில் லாஷ்லியாவின் காதல் குறித்து அவரது பெற்றோர் லாஷ்லியாவிடம் நடந்துகொண்ட விதம் மிகவும் வைரலானது. இது ஒருபுரம் இருக்க கமல் சாரிடம் பேசும்போது கால் மேல் கால் போட்டு பேசக்கூடாது என லாஷ்லியாவின் தந்தை லாஷ்லியாவுக்கு அறிவுரை செய்தார்.

தந்தையின் அறிவுரையை ஏற்று லாஷ்லியா இன்று அதை கடைபிடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கம்போல் இன்றும் லாஷ்லியா கால் மேல் கால் போட்டபடிதான் கமலிடம் கதைத்துக்கொண்டிருந்தார்.

லாஷ்லியாவின் அப்பா அவருக்கு கூறிய அறிவுரையை நினைவுபடுத்திய கமல், மரியாதையை மனதில் இருந்தால் போதும், நான் மாடர்ன் அப்பா.. நீங்க கால் மேல் கால் போட்டு உட்காருங்க. மரியாதையாக பேசுறீங்க அது போதும். உங்கள் டிரஸ்கு எது அழகா இருக்குமோ அப்படி உட்காருங்க என கூறினார்.


Advertisement