கதவு பக்கத்தில் நின்று கதறி கதறி அழும் லாஸ்லியா, போகாத கவின்! லீக்கான புரொமோ.



Bigg boss lashliya crying for kavin

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. தற்போது 6 போட்டியாளர்கள் மட்டும் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இன்று அதனை உறுதி செய்யும் வகையில் கவின் வெளியேறுவதும், சாண்டி, லாஷ்லியா ஆகியோர் கவினை சமாதானம் செய்வதும்போன்ற காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள் ப்ரோமோவில் கவின் பிக்பாஸ் கதவு திறந்ததும் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

bigg boss tamil

போகாத கவின் போகாத கவின் என்றபடி லாஷ்லியா கதறி அழுகிறார். மேலும், கதவு திறந்ததும் கவின் வெளியேறும்போது மீண்டும் கதவு மூடாத வகையில் கதவை தனது கையால் பிடித்துக்கொண்டு அழுகிறார் லாஷ்லியா. இதோ அந்த வீடியோ காட்சி.