சினிமா பிக்பாஸ்

சரவணன் போல் மாறிய பிக்பாஸ் லாஷ்லியா! அவர் வெளியே போயும் இப்படியா? வீடியோ.

Summary:

Bigg boss lashliya acting as saravanan

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் ஒருசில காரணங்களுக்காக சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும்.

இந்நிலையில் விஜய் டிவி இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோ ஒன்றில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் அங்கிருக்கும் ஆண்கள் போல் வேடமிட்டு அவர்களை போல நடித்துக்காட்ட வேண்டும். இதில் மதுமிதாவுக்கு சேரன் வேடமும், சாக்ஷிக்கு சாண்டி வேடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

லாஷ்லியாவுக்கு சரவணன் போல் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. லாஷ்லியா சரவணன் போல் உடை அணிந்து, மீசை வைத்து நெஞ்சை நிமிர்த்தி சரவணன் போல் நடந்து வருகிறார். சரவணன் வெளியே போனபிறகும் அவரை இன்னும் விடலையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement