சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து கவின் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்.

கடந்த 105 நாட்களுக்கு மேலாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார்.
இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி பிரபலமான நடிகர் கவின் லாஷ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இறுதியில் வீட்டை விட்டு வெளியேறினார்.
கவின் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினின் அம்மா மற்றும் பாட்டி உள்ளிட்டவர்கள் சீட்டு மோசடி வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்றனர். அந்த செய்தி கவினின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்தது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் முதல் வேலையாக தனது அம்மாவை ஜெயிலில் இருந்து வெளியே கூட்டி வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வின் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டி ஆகியோருடன் வீட்டில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.