கவீனுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா? இன்ப அதிர்ச்சியில் பெருமூச்சு விடும் ரசிகர்கள்! தீயாய் பரவும் தகவல்.
கவீனுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா? இன்ப அதிர்ச்சியில் பெருமூச்சு விடும் ரசிகர்கள்! தீயாய் பரவும் தகவல்.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இந்த வாரத்துடன் முடிவடைகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
யாரும் எதிர்பாராத வகையில் தர்சன் நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்னர் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார். கவின் தானாக வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் வாங்கிய சம்பளம் குறித்து கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதவாது ஒருநாளைக்கு ரூபாய் 35 ஆயிரம் வீதம் 95 நாட்களுக்கு 33 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்றதாகவும், கடைசியாக பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை சேர்த்து மொத்தம் 38 லட்சத்து 25 ஆயிரத்தை கவின் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
உண்மைலையே கவின் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் சம்பளம் வாங்கினாரா? அல்லது அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாக வாங்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.