பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்! வெளியான வீடியோ, கண்ணீர் விட்டு அழும் பிரபலங்கள்.



bigg-boss-kavin-left-from-house-with-5-laksh

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். போட்டி முடிய இன்னும் 10 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார் முகேன். அவரை தொடர்ந்து வேறு யாரெல்லாம் இறுதி வாரத்திற்கு தகுதியாக போவது என்று இந்த வாரம் தெரிந்துவிடும்.

bigg boss tamil

இது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக நேற்று செய்திகள் பரவின. இன்று அதனை உறுதி செய்யும் வகையில் புது ப்ரோமோ ஓன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் சாண்டி, கவினிடம் 10 நாள் தான் உள்ளது ஏன் வெளியேறுகிறாய், ஏன் இப்படி செய்தாய் என கண்ணீருடன் கேட்க கவின் அவரை ஆறுதல் செய்கிறார்.