சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாரா கவின்? வெளியான புது தகவல்கள்.

Summary:

Bigg boss kavin left from bb house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 94 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் சீசன் மூன்று முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி முகேன் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் மீதம் உள்ள 5 நபர்களில் யார் யார் இறுதி வாரத்திற்கு போக போகிறார்கள் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது.

அந்த அதிகாரபூர்வமற்ற செய்தியின் படி, போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வெளியேறியுள்ளதாக அந்த தகவலில் உள்ளது.

கடந்த சீசனில் இதேபோல யாஷிகாவிற்கு பணம் வழங்கப்பட்டு அடுத்த வாரமே அவர் வெளியிடேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement