தீயாக பரவும் தகவல்.. பிக்பாஸ் கவினுக்கு விரைவில் கல்யாணம்..? மணப்பெண் யார் தெரியுமா?

தீயாக பரவும் தகவல்.. பிக்பாஸ் கவினுக்கு விரைவில் கல்யாணம்..? மணப்பெண் யார் தெரியுமா?


bigg-boss-kavin-gonna-marry-soon-viral-news

பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடினர் கவின். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கவினும், சக போட்டியாளர் லாஷ்லியாவின் காதலில் விழ கவின்லியா ரசிகர்கள் என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இவர்களுக்கு உருவானது.

kavin

ஆனால் லாஷ்லியாவின் காதல் விவகாரம் பிடிக்காத அவரது தந்தை, பிக்பாஸ் வீட்டிற்குழையே லாஷ்லியாவை கண்டிக்க, இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் கவின் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலித்துவருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து இதுவரை கவின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.