சினிமா பிக்பாஸ்

லாஷ்லியாவுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு! என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Summary:

BIgg boss kamal price to losliya

கடந்த 105 நாட்களுக்கு மேலாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பரிசு தொகையை வென்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையை சேர்ந்த லாஷ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார். லாஷ்லியா முதல் இடம் பெறாதது அவர் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவருக்கு சினிமா துறையில் இனி பெரிய வாய்ப்பு இருப்பதாக கூறி மகிழ்ச்சியில் உள்னனர்.

இது ஒரு புறம் இருக்க, இறுதி வாரத்திற்கு தேர்வான நால்வருக்கும் கமல் தனது கைப்பட எழுதிய கவிதையை பரிசாக வழங்கினார். அதில் லாஷ்லியா பற்றி எழுதிய கமல், 

நண்பர்கள் கொஞ்சமாய் குறைத்த பெயர் கொண்ட லியா, வெளி உலகம் வியக்குது உன்னை, விளங்க லியா? பெருகிவரும் ஆதரவும் புரிய லியா? புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க லியா? சிகரம் தொட நீ ரெடியா லாஸ் லியா? என்று எழுதியிருந்தார்.


Advertisement