
பிக்பாஸ் ஜூலி தனது அருகில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பிக்பாஸ் ஜூலி தனது அருகில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜூலி. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் மக்களின் ஆதரவை பெற்ற இவர் பின்னர் மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நெட்டிசன்கள் இவரை விடுவதாக இல்லை. இவர் என்ன செய்தாலும் அவரை கலாய்க்க தொடங்கினர். ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல் சினிமா துறையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறார் ஜூலி.
இந்நிலையில், ஜூலி தனது அருகில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு முத்தமிட முயற்சிப்பதும், இவர்தான் என்னுடைய உயிர் எனவும் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த இளைஞர்கள் இவர்தான் ஜூலியின் காதலரான என கேள்வி எழுப்ப தொடங்கினர்.
ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஜூலியின் காதலர் இல்லை. அது ஜூலியின் சகோதரர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement