சினிமா Bigg Boss

பிக்பாஸ் ஜூலியா இது..? வேற லெவல் மாற்றம்.. பாத்தா நீங்களே நம்ப மாட்டீங்க... வைரல் புகைப்படம்.

Summary:

பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் நடத்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜூலி. போராட்டத்தில் இவர் பேசிய வீர வசனங்கள், இவர் நடந்துகொண்ட விதம் இவரை பெரிய பிரபலமாக்கியது. இந்த பிரபலத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கும் என எதிர்பார்த்தநிலையில், பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் இவர் மீதான வெறுப்பினை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் புகைப்படம் வெளியிட்டால் கூட, தேடி தேடி மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் இவரை ஒரு வழி ஆக்கிவிட்டனர். ஆனாலும் தன்மீது வரும் விமர்சனங்களை பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார் ஜூலி.

எப்போதும் வித விதமா போட்டோஷூட் நடத்தி, புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இது ஜூலியா என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement