சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு அவமானமா? மேடையில் இருந்து கண்ணீருடன் வெளியேறும் காட்சி.

Summary:

Bigg boss juli on college stage

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் மக்களின் ஆதரவு இவருக்கு இருந்தாலும் அதன்பின்னர் இவரது நடவடிக்கையால் மக்கள் இவரை வெறுக்க ஆரம்பித்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகும் கூட இவர் செய்யும் அணைத்து செயல்களையும் ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஜூலி.

ஜூலி மேடையில் ஏறி பேச தொடங்கியதும் மாணவர்கள் ஓவியா, ஓவியா என கோசம் போட ஆரம்பித்தனர். இதனால் கடுப்பான ஜூலி, உங்களுக்கு நான் சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்று கூறினார்.

ஜூலி என்னதான் வீர வசனம் பேசினாலும் மாணவர்கள் விடுவதாக இல்லை. இறுதியில் கண்கலங்கியவாறு மேடையை விட்டு வெளியேறியுள்ளார் ஜூலி. 


Advertisement