சினிமா

புத்தாண்டு "கருத்து" கூறிய பிக் பாஸ் ஜூலி! வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

Summary:

Bigg boss juli new year wishes on twitter

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் ஜூலி. அதன்மூலம் பிரபல தனியார் தொலைகாட்ச்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் போட்டியில் காலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற புதிதில் மக்களின் ஆதரவம் ஜூலி பக்கம்தான் இருந்தது.

ஆனால் தனது சக போட்டியாளர் காயத்ரியுடன் சேர்ந்து ஜூலி செய்த காரியங்கள் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய கோவத்தை ஏற்படுத்தியது. நாட்கள் செல்ல செல்ல ஜூலி மீது இருந்த கோவம், வெறுப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலிக்கு கலைஞர் டிவி வாய்ப்பு வழங்கியது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடிவிளையாட்டு பாப்பா என்ற நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார் ஜூலி. மேலும் அவ்வப்போது ஏதாவது கருத்து கூறி மக்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளானார் ஜூலி.

இந்நிலையில் அனிதா MBBS , அம்மன் தாயி போன்ற படங்களில் நாயகியாக நடிக்க ஜூலிக்கு அழைப்பு வர, அவரும் நடித்து முடித்து விட்டார்.  அம்மன் தாயி படத்தின் ட்ரைலரை பார்த்து அனைவரும் மரண கலாய் கலாய்த்தனர். தற்போது அனிதா எம் பி பி எஸ் படமும் பிரச்சனையில் உள்ளது. 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்தார். இந்த பதிவை பார்த்த பலரும் ஜூலியை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். 


Advertisement