சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இதுவரை யாரும் செய்யாததை ஓப்பனாக செய்த ஜாங்கிரி மதுமிதா! என்ன செய்தார் தெரியுமா?

Summary:

Bigg boss jankiri madhumitha activities in bigg boss house

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன்  3 நிகழ்ச்சி இனிதே தொடங்கி நடைபெற்று வருகிறது.  சீசன் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. 

சீசன் 1 மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் 3 ஐயும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  இந்த சீசனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் இன்று அதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களில் ஒருவராக ஓகே ஓகே பட காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் கலந்து கொண்டார்.  போட்டியில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஜாங்கிரி மதுமிதா வீட்டில் தான் எப்படி இருப்பேன், தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். 

படங்களில் மிகவும் நகைச்சுவையாக நடிக்கும் ஜாங்கிரி மதுமிதாவிற்கு சினிமாவை தாண்டி அடுத்ததாக சாமி கும்பிடுவதில் மிகவும் ஆர்வமாம். அதேபோல் அசைவம் சாப்பிடுவதிலும் அவருக்கு மிகவும் ஆர்வம் என கூறினார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து மந்திரம் சொல்லிக்கொண்டே வந்த ஜாங்கிரி மதுமிதா தனது காலனியை வெளியில் கழட்டிவைத்துவிட்டு அனைவர்க்கும் கேட்கும் வகையில் மந்திரம் சொல்லி சாமி கும்பிட்டார்.

வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் யார் யார் உள்ளார்கள் என்பதைக்கூட பார்க்காமல் சாமி கும்பிடுவதில்லையே ஆர்வமாக இருந்தார் ஜாங்கிரி மதுமிதா. மந்திரம் கூறி சாமி கும்பிட்டபிறகே தனது காலணிகளை வீட்டினுள் எடுத்துவந்தார். இதுவரை நடந்த இரண்டு சீசனிலும் எந்த ஒரு போட்டியாளர்களும் இதுபோன்று செய்ததில்லை.


Advertisement