நடக்கணும்னு ஆச இல்லை, ஆனால் அதுக்காகவாது நடந்த நல்லா இருக்கும்! பிக் பாஸ் காயத்ரி!

நடக்கணும்னு ஆச இல்லை, ஆனால் அதுக்காகவாது நடந்த நல்லா இருக்கும்! பிக் பாஸ் காயத்ரி!


bigg-boss-gayathri-talks-about-her-second-marriage

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் ரகுராம். இவரது மகள்தான் பிக் பாஸ் காயத்ரி. காயத்ரி ஒருசில படங்களில் கதாநாயகியான நடித்துள்ளார். மேலும், பல்வேறு படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்ட விதம், இவர் பேசிய வார்த்தைகள் என மக்கள் மத்தியில் பயங்கர வெறுப்பை சம்பாதித்தார் காயத்ரி.

Bigg boss

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் விஜய் தொலைக்காட்சில் ஒரு போட்டிகளில் நடுவராக பங்கேற்றார், தற்போது ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார் காயத்ரி. இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன காயத்ரி தற்போது தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும். நடக்குமா என்று பார்ப்போம் என கூறியுள்ளார்.