சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் மீரா மிதுனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? அட! இவ்வளவு அழகான தமிழ் பெயரா?

Summary:

Bigg boss fame meera mithun original name

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகையும், மாடலுமான மீரா மிதுன். மிஸ். தென்னிந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன் அதன்மூலம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனைவரிடமும் சண்டை போடுவது, குற்றம் சாட்டுவது என பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்துச்சென்றார்.

இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என குற்றம்சாட்டி பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் வீடியோ வெளியிடுவது, சர்ச்சையாக பேசுவது என பரபரப்பை கிளப்பிவருகிறார் மீரா மிதுன்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் உண்மையான பெயர் என்ன என்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ் செல்வியாம். தமிழ் செல்வி என்ற அழகான தமிழ் பெயரை கொண்ட இவர் பின்னர் தனது பெயரை மீரா மிதுன் என மாற்றிக்கொண்டுள்ளார்.


Advertisement