தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
லாஷ்லியா தந்தை மரணம் : இயக்குனர் சேரன் வெளியிட்ட மிக உருக்கமான பதிவு

லாஷ்லியாவின் தந்தை உயிரிழந்த செய்தி தன்னை மிகவும் உருக்குவதாக இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் இலங்கையை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர் லாஷ்லியாவின் தந்தை நேற்று இரவு திடீரெனெ காலமானார். லாஷ்லியா தந்தையின் மரண செய்தி அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் லாஷ்லியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் லாஷ்லியாவுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள் லாஷ்லியாவின் தந்தை இறப்பு செய்தியை கேள்விப்பட்டதை அடுத்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் இருந்தபோது லாஷ்லியா சேரனை தனது அப்பா என்று அழைத்ததும், சேரன் லாஷ்லியாவை தனது மகள் போல் பாவித்ததும் குறிப்பிடத்தக்கது.
லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள். @Losliyamaria96
— Cheran (@directorcheran) November 15, 2020