சூடுபறக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி! அடுத்த வாரம் காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ் இதுதானா? செம்ம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சூடுபறக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி! அடுத்த வாரம் காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ் இதுதானா? செம்ம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!


Bigg Boss evicted 2 contestants next week

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று 50 நாட்களை கடந்துள்ளது. மேலும்  தற்போது பிக்பாஸ் வீட்டில் அனிதா, அர்ச்சனா, ஆரி, ஆஜீத், பாலாஜி, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரியோ, சோம்,  சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி என 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

மேலும் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா என நான்கு பேர் வெளியேறி இருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அன்பு, காதல், சண்டை, மோதல், வாக்குவாதம் என சுவாரசியங்கள் கூடிக் கொண்டே போகிறது. 

bigboss

இந்நிலையில் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 50 நாட்களே மீதமிருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இறுதி நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தொகுப்பாளரான கமலும் இனி எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சூசகமாக கூறிவிட்டுச் சென்றார். இதனால் வரும் வாரம் இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களும் அதனை பெருமளவில் எதிர்பார்க்கின்றனர்.