சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் இவர் தான்.! உறுதியான தகவல்.!

Summary:

Bigg boss elimination name leaked

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மூன்று வாரங்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் மதுமிதா, வனிதா, மீரா, சரவணன், மோகன் வைத்யா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் பிக்பாஸ் வனிதாவுக்கு ஒரு சூப்பர் பவர் கொடுத்துள்ளார். இதனால், வனிதா எப்படியும் அந்த சூப்பர் பவரை வைத்து எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிடுவார். எனவே இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது மோகன் வைத்யாதான் என ரசிகர்கள் கூறிவருகின்றன்னர்.


Advertisement