சினிமா பிக்பாஸ்

பிக்பாஸில் இருந்து வெளியே போனது இவர்தான்! லேட்டஸ்ட் தகவல். யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

Summary:

Bigg boss elimination 5th contestant name

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 பிரபலங்கள் போட்டியளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது 12 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக சென்ற சீசன் 3 தற்போது முக்கோண காதல் கதையால் ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் கமல் மதுமிதாவை காப்பாற்றிவிட்டதால் கவின், ரேஷ்மா, சாக்க்ஷி, அபிராமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டிலில் உள்ளனர்.

கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத நிலையில் ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது.


Advertisement