பிக்பாஸ் தர்சனின் தங்கை வெளியிட்டுள்ள புது வீடியோ. வீடியோவில் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 96 நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று கவின் வெளியேறியதை அடுத்து தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.
முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ள நிலையில் வேறு யாரெல்லாம் இறுதி வாரத்திற்கு போகப்போகிறார்கள் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும். இந்நிலையில் தனது அண்ணனுக்கு ஓட்டு கேட்டு தர்சனின் தங்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இதுவரை தர்சனுக்கு ஆதரவு கொடுத்த அனைவர்க்கும் நன்றி எனவும், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற உங்கள் ஆதரவு தேவை என்றும், அனைவரும் அவருக்கு வாக்களிக்குமாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.