சினிமா பிக்பாஸ்

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த தர்சன்! வந்த முதல் வேலையாக என்ன செய்துள்ளார் தெரியுமா?

Summary:

BIgg boss dharsan re entry to house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் முடிவடைய உள்ள சீசன் மூன்றின் பட்டத்தை வெல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 போட்டியாளர்களில் தற்போது லாஷ்லியா, ஷெரின், சாண்டி மற்றும் முகேன் ஆகிய நால்வரும் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த தர்சன் இறுதி வரை சென்று பட்டத்தை கைப்பற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் தர்சன்.

ஏற்கனவே வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள வனிதா ஷெரினிடம் தர்ஷன் எலிமினேட் ஆக நீ தான் காரணம் என்று கூறினார், இதை கேட்டு ஷெரின் அழுத்துக்கொண்டே தான் இருந்தார்.

தற்போது வீட்டிற்குள் வந்த தர்ஷன் முதல் வேலையாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் எலிமினேட் ஆக நீ காரணம் இல்லை, யார் சொல்வதையும் நம்பாதே என பதிலடி கொடுத்தார்.


Advertisement