
Bigg boss dharsan post
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறிய தர்சன் தனது காதலி சனம் ஷெட்டியை சந்தித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மக்களுக்கு நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ர்த்துள்ளார் தர்சன்.
அந்த பதிவில், நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அன்பை பெறுவது ஒரு நல்ல உணர்வு. அதுவே நமக்கு தெரியாதவர்களிடம் இருந்து பெரும் அன்பானது அதை விட பெரியது. இன்றைய நாள் ஏன் வாழ்வில் மிக முக்கியமான நாள், கடந்த 98 நாட்களாக என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து ஆதரவளித்ததுக்கு நன்றி.
எனது மனம் முழுவதும் அன்பு நிலவி வருகிறது. விரைவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தர்ஷன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்..
Advertisement
Advertisement