பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றதும் தர்சன் முதலில் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? புகைப்படம்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றதும் தர்சன் முதலில் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? புகைப்படம்.

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள சீசன் 3 இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன் நேற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறியதும் முதல் வேலையாக தனது காதலியை பார்க்க சென்றுள்ளார் தர்சன். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள சனம் ஷெட்டி இது எனக்கு சோகமான புகைப்படம். இது நியாயம் இல்லை பிக்பாஸ். அவர் கடைசி வரை இருந்து ஜெயித்துவிட்டு வந்திருக்கவேண்டியவர் என பதிவிட்டுள்ளார்.