சினிமா

பிக்பாஸ் தர்சனா இது? ஜிம் ஒர்கவுட் புகைப்படம் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள். புகைப்படம் இதோ.

Summary:

Bigg boss dharsan gym workout photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்றுவந்த தர்சன் போட்டியின் இறுதிவரை வந்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டார்.

இருப்பினும் தான் தயாரிக்கும் படத்தில் தர்சனை நடிக்க வைப்பதாக பிக்பாஸ் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நடிகர் கமலகாசன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து அனைத்து போட்டியாளர்களும் அடுத்தடுத்த படங்கள், வேலைகளில் பயங்கர பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் தான் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் தர்சன். பிக்பாஸ் வீட்டில் உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்ட தர்சன் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement