
Bigg boss dharsan and sanam shetty in seran preview show
கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தர்சன் இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நடிகை ஷெரினுடன் இவரது பெயர் அடிபட்டாலும் இவருக்கு ஏற்கனவே வெளியில் காதலி இருப்பது வைரலாக பேசப்பட்டது.
பிரபல நடிகை சனம் ஷெட்டி என்பவரை காதலித்து வரும் தர்சன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து தனது காதலியுடன் ஊர் சுற்றிவருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இயக்குனர் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தின் பிரிவியூ ஷோவில் தர்சன் தனது காதலி சனம் ஷெட்டியுடன் கலந்துகொண்டார்.
தனது குடும்பத்துடன் வந்திருந்த சேரனுடன் தர்சன் மற்றும் அவரது காதலி இருவரும் சேர்ந்து எடுடுத்க்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
Advertisement
Advertisement