சரிந்துவிழுந்த லாஷ்லியா, ஷெரினுக்கு கால் பிடித்துவிடும் சேரன்! நடந்தது என்ன? வீடியோ உள்ளே.

சரிந்துவிழுந்த லாஷ்லியா, ஷெரினுக்கு கால் பிடித்துவிடும் சேரன்! நடந்தது என்ன? வீடியோ உள்ளே.


BIgg boss day 87 promo video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 86 நாட்களை கடந்துள்ள சீசன் மூன்று இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டும் விளையாடிவருகின்றனர்.

போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அணைத்து போட்டியாளர்களிடமும் கடுமையன போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் இறுதி வாரத்திற்கு நேரடியாக செல்லும் போட்டியாளரை தேர்வு செய்யும் போட்டி தற்போது நடந்துவருகிறது.

bigg boss tamil

இந்நிலையில் இன்றைய டாஸ்கில் வட்டத்திற்குள் அனைவரையும் ஓட வைத்து அவர்கள் முதுகில் தெர்மக்கோல் நிறைந்த மூட்டையை தூக்கி கொண்டு ஓடவேண்டும். ஒருவர் பின் ஒருவராக ஒடி மற்றவர் முதுகில் இருக்கும் மூட்டையில் உள்ள தெர்மகோலை வெளியே எடுக்க வேண்டும்.

இந்த டாஸ்கில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த லாஸ்லியா மற்றும் ஷெரினுக்கு காலில் அடிபடுகிறது. லாஷ்லிய தனது காலை பிடித்துக்கொண்டு உட்காருகிறார். மற்றொரு காட்சியில் ஷெரீனுக்கு சேரன் காலை பிடித்துவிடுகிறார்.