பிக்பாஸ் வீட்டுல அது இருக்கு! அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்! வார்த்தையை விட்ட சுரேஷ்! காண்டான ரியோ.



Bigg boss controversy against riyo and suresh viral video

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக சுரேஷ் சக்கரவர்த்தி கூற, நடிகர் ரியோ அவரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சண்டை, மோதல், வாக்குவாதம் என பிக்பாஸ் வீடு வெறித்தனமாக உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாடகர் வேல்முருகன் மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

Bigg boss

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் சுரேஷ் மற்றும் ரியோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஏதோ டாஸ்க் கொடுக்கிறார். அதில், பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாகவும், தன்னை சிலர் கார்னர் செய்வதாகவும் சுரேஷ் சக்கரவர்த்தி கூறுகிறார். பின்னர் அங்கிருந்து வெளியே வரும் சுரேஷ் சக்கரவர்த்தியை ரியோ, அனிதா சம்பத், சனம் ஆகியோர் ரவுண்டு கட்டுகின்றனர்.

இந்த வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் என ரியோ சுரேஷிடம் கேட்க, மற்றவர்களும் சுரேஷிடம் கேள்வி கேட்கின்றனர். அந்த டாஸ்க் எப்போதோ முடிந்துவிட்டது என அந்த இடத்தில் இருந்து நகர்கிறார் சுரேஷ். இதுக்குத்தான் இடையில் பேசாதிங்கனு சொன்னேன், அவர் எஸ்கேப் ஆயிட்டார் பாருங்க என டென்ஷன் ஆகிறார் ரியோ.