ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
உங்க பாசத்துக்கு ஒரே அளவே இல்லையா? வைரல் வீடியோவால் கலாய்க்கும் ரசிகர்கள்.
உங்க பாசத்துக்கு ஒரே அளவே இல்லையா? வைரல் வீடியோவால் கலாய்க்கும் ரசிகர்கள்.

கடந்த 105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த சீசனை பொறுத்தவரை கவின், சாண்டி, லாஷ்லியா, தர்சன் மற்றும் முகேன் ஆகியோர் சிறந்த நண்பர்களாகவே பழகிவந்தனர். தற்போது நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து அனைவரும் சாண்டி மாஸ்டர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.
இதன் ஒருபகுதியாக தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கவின், சாண்டி, தர்சன் மூவரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதில் சாண்டி தர்சனுக்கு ஊட்டிவிட, தர்சன் சாண்டிக்கு ஊட்டிவிட, பின்னர் தர்சன் கவினுக்கு ஊட்டிவிட, இதை லாஷ்லியா வீடியோ எடுக்க என பாசத்தில் பொங்கி வழிகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், உங்கள் பாசத்திற்கு ஒரே அளவே இல்லையா என்பதுபோல் கமெண்ட் செய்து வருகின்றனர்.