சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் புகழ் பரணியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அவரே கூறிய முக்கிய தகவல்.

Summary:

Bigg boss barani current status

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நாடோடிகள். இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்தவர் நடிகர் பரணி. அந்த படம் இவரது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நாடோடிகள் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் பரணி.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் பரணி. இந்த படம் தன்னை மீண்டும் சினிமாவில் பேசப்படும் நடிகராகும் என்று எதிர்பார்ப்பதாக பரணி தெரிவித்துள்ளார்.

படம் வரும் அக்டொபர் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படம் வெற்றிபெறவேண்டும் என திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளதாக பரணி தெரிவித்துள்ளார்.


Advertisement