சினிமா Bigg Boss

பாவம் அந்த மனுஷன்! வந்ததும் வராததுமா வெறுப்பேற்றும் அர்ச்சனா! கடுப்பான சுரேஷ்! ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.

Summary:

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தொகுப்பாளினி அர்ச்சனா சுரேஷை கடுப்பேற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தொகுப்பாளினி அர்ச்சனா சுரேஷை கடுப்பேற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் போட்டியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் வீட்டிற்குள் வந்ததும் மற்ற போட்டியாளர்களுடன் அமர்ந்து பேசுவதும், சுரேஷை கடுப்பேற்றுவதும் போன்ற காட்சிகள் அடுத்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

அதில், சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதர்வர்கள் யார் என அர்ச்சனா கேள்வி எழுப்ப, சமையல் மட்டும்தான் பிடிக்கும், அதனால்தான் கைதூக்க முடியல என ரியோ பதில்கூற, எவன் அவன் என அர்ச்சனா கேட்க, அதை சொன்னவன தான் கேட்கணும் என சுரேஷ் பதில் கூறுகிறார்.

அதற்கு உடனே அர்ச்சனா சுரேஷை பார்த்து அப்போ கேட்டு சோல்டறீங்களா என நக்கலாக கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல், சுரேஷுக்கு கண்ணுபட போகிறது என அர்ச்சனா சுத்தி போடுகிறார். மேலும் நீங்க பலவருஷமா தொகுப்பாளரா இருந்திருக்கீங்க எப்படி என அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு சுரேஷ் பதில் கூற, எல்லாவற்றிக்கும் எகத்தாளமாக ரியாக்சன் கொடுத்து சுரேஷை வெறுப்பேற்றுகிறார் அர்ச்சனா.

இறுதியில் அந்த இடத்தில் இருந்து சுரேஷ் கோவமாக செல்வதுபோல் உள்ளே செல்கிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement