சினிமா Bigg Boss

கதறி கதறி அழும் பிக்பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..

Summary:

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா தனது மகளை கட்டியணைத்து அழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா தனது மகளை கட்டியணைத்து அழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வாரம் வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் குறைந்த அளவிலான போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இதில் யார் யார் இறுதிவரை செல்லப்போகின்றனர்? அதில் யார் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வைல்ட் கார்ட் போட்டியாளராக சென்ற அர்ச்சனாவால் போட்டியில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா தனது வீட்டிற்கு சென்றகையோடு தனது செல்ல நாய் மற்றும் தனது மகளை கட்டி அனைத்து ஆனந்தக்கண்ணீர் விடும் விடீயோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement