சினிமா Bigg Boss

சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. கண்ணீருடன் வந்த அனிதா சம்பத்... வைரல் ப்ரோமோ வீடியோ..

Summary:

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள அனிதா சம்பத்தை சக போட்டியாளர்கள் கண்ணீருடன் வரவேற்ற வீடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள அனிதா சம்பத்தை சக போட்டியாளர்கள் கண்ணீருடன் வரவேற்ற வீடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

16 பிரபலங்கள், 2 வைலட் கார்ட் போட்டியாளர்கள் என 18 பேர் கலந்துகொண்டு விளையாடிய பிக்பாஸ் சீசன் 4 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வீட்டில் இருந்து 12 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 6 போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் 6 பேரில் யார் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் முன்னதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வந்துள்ளனர். சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, அனிதா ஆகிய மூவர் மட்டும் வராமல் இருந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்கு வருகைதரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில நாட்களில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்து இன்னும் மீண்டுவராத அனிதா சம்பத்தை பிக்பாஸ் போட்டியாளர்கள் கண்ணீருடன் வரவேற்று அவருக்கு ஆறுதல் கூறினர்.


Advertisement