மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க தூண்டும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் கலக்கல் தோற்றம்! புகைப்படம் இதோ!

Bigg boss aishwarya dutta in saree photos


Bigg boss aishwarya dutta in saree photos

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை அடுத்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் நடித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

aishwarya dutta

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் இவர் அடுத்ததாக கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, அலேக்கா போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவரும் இவர் சமீபத்தில் சேலை அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ஹோம்லியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செம அழகாக இருக்கும் அவரின் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on