முன்பைவிட இப்போ பலமடங்கு உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய ஆர்த்தி.. வைரலாகும் புகைப்படங்கள்..



Bigg boss aarthi latest fat photo goes viral

முன்பைவிட தற்போது மேலும் குண்டான தோற்றத்திற்கு மாறிவிட்ட நடிகை ஆர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. குழந்தை நட்சத்திரமா தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அருள் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தொடர்ந்து சீரியல், சினிமா என நடிக்க தொடங்கினார் ஆர்த்தி. இந்நிலையில்தான் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரியளவில் படவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bigg boss arthi

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பெரிதாக எந்த ஒரு படத்திலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பார்க்கமுடியவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருந்துவந்த இவர் தற்போது தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்த ஆர்த்தி, தற்போது மேலும் உடல் எடை கூடி, பயங்கர குண்டாக மாறியுள்ளார். அவரது புகைப்பட்டதை பார்க்கும் ரசிகர்கள் ஆர்த்தியா இது? என கமெண்ட் செய்யும் அளவிற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார் ஆர்த்தி. இதோ அவரது புகைப்படங்கள்.