சினிமா

பிக்பாஸ் சீசன் 5: எனக்கு சம்பளமே வேண்டாம்...மக்களை ஆச்சர்யபட வைத்த நபர்...வெளியான புதிய தகவல்.!

Summary:

பிக்பாஸ் சீசன் 5: எனக்கு சம்பளமே வேண்டாம்...மக்களை ஆச்சர்யபட வைத்த நபர்...வெளியான புதிய தகவல்.!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்டாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5யில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் கூடியவர்களுள் முதல் நபராக தொகுப்பாளியான பிரியங்காவிற்கு தான் அதிக சம்பளமாம். நாளொன்றுக்கு ரூ.50,000 வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து இமான் அண்ணாச்சி ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் வாங்கியுள்ளாராம்.பாவனிக்கு ஒரு நாளைக்கு 20,000 வழங்கப்படுகின்றதாம். சின்னப் பொண்ணு, ராஜு, அபிஷேக், அபிநய் ஆகிய நால்வருக்கும் ஒருநாள் சம்பளம் 25,000 வழங்கப்படுகின்றதாம். ரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத இசைவாணி, அக்ஷரா ஆகிய இருவருக்கும் ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் வழங்கபட்டதாம்.

மேலும் ஸ்ருதி, ஐக்கி, நிரூப், சிபி, தாமரை ஆகிய ஐவருக்கும் நாளொன்றுக்கு 10,000 வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இவர்களை தவிர பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே வந்த வருண் தனக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளாராம். ஆனாலும் கௌரவ ஊதியமாக ஒரு தொகை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Advertisement