14 வயதில் இந்த நடிகர் என்னை துரத்தி துரத்தி காதலித்தார்! பிக்பாஸ் வனிதா போட்டுடைத்த ரகசியம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

14 வயதில் இந்த நடிகர் என்னை துரத்தி துரத்தி காதலித்தார்! பிக்பாஸ் வனிதா போட்டுடைத்த ரகசியம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஒருகால கட்டத்தில் சினிமாத்துறையில் முன்னணி நடிகராகி இருந்த நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர்  விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்ததன் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.அதனை தொடர்ந்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜெயனிதா என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். மேலும் தற்போது வனிதா தனது குடும்பத்தினரிடமும் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இரு மகள்களுடன் தனியாக  வசித்து வருகிறார். மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது தந்தையுடன் மற்றும் விஜயகுமார் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர். பின்னர் தற்போது குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் சீரியல் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் காதலர்தினம் ஸ்பெஷலாக அளித்த பேட்டியில், தனது இளம்வயது காதல் அனுபவம் குறித்து கூறியுள்ளார்.அப்பொழுது அவர் எனக்கு என்னுடைய 14 வயதில்தான் முதல்காதல் தொடங்கியது. அப்பொழுது நான்காவது படிக்கும் குட்டிப்பையன் துரத்தி துரத்தி என்னை லவ் பண்ணினான். அவன் அதை என்னிடம் சொல்லும் போது சிரிப்புதான் வந்தது. மேலும் இதை நான் எங்க வீட்டில் சொல்லும் போது அனைவரும் ஆடிப் போயிட்டாங்க. அவன் இளமையான, துறுதுறுப்பான பையன், அவனுக்கு என்றும் 16 தான். அவர் தற்போது சினிமா துறையில்தான் இருக்கிறான்.நல்ல பிரபலம். அது யார் என்று இப்போ நான் சொல்லவிரும்பலை. எனது முதல்காதல் அதுதான்.பல வருடங்கள் கழித்து நாங்கள் நண்பர்களாக மாறிட்டோம். பப்பி லவ் ஒருவிதமான கிரஷ்.என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில் சிறுவயதில் வனிதாவை காதலித்தது யார் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


  


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo