சினிமா பிக்பாஸ்

என்னது! பிக்பாஸ் வத்திக்குச்சி வனிதாக்காவிற்கு இன்று இவ்வளவு முக்கியமான நாளா?

Summary:

Bigboss vanitha birthday today

பிக்பாஸ் சீசன்3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க  வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் பிக்பாஸ் பட்டத்தை வெல்லபோகும் பிரபலம் யார் என அறிந்துகொள்ள பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் மட்டுமே இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.  

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் வனிதா. அவர் வந்தது முதலே அனைவரிடமும்  தானே முன் வந்து பிரச்சினையை ஏற்படுத்துபவராக இருந்தார். அவராலே வீட்டில் பல பிரச்சினைகள் வெடித்தது. மேலும் பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். இவ்வாறு கறாராக நடந்து கொள்ளும் வனிதா குறைந்த வாக்குகளை பெற்று முதலில் வெளியேறினார்.

அதனை தொடர்ந்து மீண்டும்  வைல்டுகார்டு  எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல கலவரங்களை உருவாக்கினார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக அவரது குழந்தைகள் வந்த நிலையில் அவர்கள் மீது இவர் காட்டிய அக்கறை,அன்பு  அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.இ

தனைத்தொடர்ந்து மீண்டும் பஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குனரும், பிக்பாஸ் போட்டியாளரான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கை என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    


Advertisement