குற்றவாளியான ஜுலி.! வக்கீலாக மாறி உளறிய தாமரை! வைரலாகும் கலகலப்பான வீடியோ!!

குற்றவாளியான ஜுலி.! வக்கீலாக மாறி உளறிய தாமரை! வைரலாகும் கலகலப்பான வீடியோ!!


bigboss-ultimate-today-promo-viral

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலர் போட்டியாளர்களாக களமிறங்கினர். 

ஆரம்பத்தில் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் சில தவிர்க்க முடியாத  காரணங்களால் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சில வாரங்களுக்கு முன்பு கேபிஒய் சதீஸ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வாய்மையே வெல்லும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜுலி குற்றவாளி கூண்டில் நிற்க, அவருக்கு ஆதரவாக ஸ்ருதி மற்றும் அவரை எதிர்த்து தாமரை இருவரும் வக்கீலாக களமிறங்கி வாதாடுகின்றனர். இதில் தாமரை வக்கீல் கோட் அணிந்து உளறி தள்ளியுள்ளார். அந்த கலகலப்பான ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.