
மோதிகொள்ளும் போட்டியாளர்கள்! பாலாவை கடித்த பெண் போட்டியாளர்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சி அன்பு, மோதல், சண்டை என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துக்கொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கி வந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் அண்மையில் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் ரம்யா பாண்டியன் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் போட்டியாளர்களுக்கு முட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது முட்டையை எடுத்துக்கொண்டு நகர்ந்த ரம்யாவை பாலா பின்னே இருந்து பிடித்துள்ளார்.
இந்நிலையில் ரம்யா தப்பிப்பதற்கு பாலாவின் கையை கடித்துள்ளார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ரம்யா தான் கடித்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ஆனாலும் வாக்குவாதம் ஏற்பட்டு போட்டியாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement