ஒருவழியாக அபிநய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.. பிக்பாஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கண்ணீர்விட்ட போட்டியாளர்கள்!!

ஒருவழியாக அபிநய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.. பிக்பாஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கண்ணீர்விட்ட போட்டியாளர்கள்!!


bigboss-ultimate-promo-viral-WD9A3V

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அண்மையில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சண்டை, சச்சரவு எனவும் சென்று கொண்டுள்ளது. இதில் பிக்பாஸ் 5 சீசன்களில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்

இதில் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கடந்த வாரம் சுஜா வருணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் காதலர் தின வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பாவனி காதல் சர்ச்சையால் அபிநய் வீட்டில் மோதல் ஏற்பட்டதாகவும், அவரது மனைவி அபிநய்யை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று அபிநய்யின் மனைவி மற்றும் மகள் இருவரும் அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த சர்ச்சைக்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.