ஓ.. இவருமா! பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் முக்கிய போட்டியாளர்! வைரலாகும் வீடியோ!!

ஓ.. இவருமா! பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் முக்கிய போட்டியாளர்! வைரலாகும் வீடியோ!!


Bigboss ultimate promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.  இதில் கலந்து கொண்ட பலரும் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர். இதன் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி மற்றும் அண்மையில் நடந்து முடிந்த 5வது சீசனில் ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கமல் தொகுத்து வழங்க உள்ள இந்த சீசனில் பிக்பாஸ் ஐந்து சீசனிலும் கலந்து கொண்ட சில பிரபலங்கள் பங்கேற்கின்றனர். 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி சினேகன், வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, அபிராமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் செல்வது உறுதி செய்யப்பட்டு ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.