சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது இவர்தானா?? கசிந்த தகவல்! ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது இவர்தானா?? கசிந்த தகவல்! ஷாக்கில் ரசிகர்கள்!!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும்,  சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சண்டை, அன்பு, மோதல், சச்சரவு என எதற்கும் பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.  

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இதில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துக்கொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். ஆரம்பத்தில் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் வெளியேறவே தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் பரவி வருகிறது.

அதாவது இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் ஜுலி, பாலா, சினேகன், ஸ்ருதி ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்களில் சினேகன் மற்றும் ஸ்ருதி குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும், இவர்கள் இருவரில் ஒருவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement