இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறபோவது இவர்தானா.! வெளிவந்த தகவல்!!

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறபோவது இவர்தானா.! வெளிவந்த தகவல்!!


bigboss-ultimate-elimination-this-week

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், நாளுக்கு நாள் சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சண்டை, அன்பு, மோதல், சச்சரவு என எதற்கும் பஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துக்கொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியின் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் விலகிய நிலையில் தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போவது யார் என அனைவரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தற்போது சினேகன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் மற்றும் அவரை தொடர்ந்து தாடி பாலாஜி, அபிராமி ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரம் சினேகன் அல்லது தாடி பாலாஜி வீட்டிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.